மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 20
வஞ்சிப்பா
வஞ்சிப்பாவின் இலக்கணம்:-
1. தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்று
கனிச்சீர் கொண்டு வரும்.
2. இது வஞ்சிப்பாவுக்கே உரிய சீர் ஆதலால் வஞ்சியுரிச்சீர் ஆகும்.
3. இவற்றோடு பிறசீர்களும் விரவி வரும்.
4. இப்பாடலுக்கு உரிய தளை வஞ்சித்தளை. இது இருவகைப்படும்.
அ) ஒன்றிய வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நிரையசை வருவது.
ஆ) ஒன்றாத வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நேரசை வருவது.
5. பிற பாடல்களுக்குரிய தளைகளும் பெற்று வரும்.
6. வஞ்சிப்பா தூங்கலோசை பெற்று அமையும்.
7. அடி வரையறை மூன்றடியாகும். இரண்டடியாகவும் வரலாம். இதற்கு மேல் எத்தனை
வேண்டுமானாலும் வரும்.